நீதிபதியை அவமதிக்கும் வகையில் செய்தி: வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

நீதிபதியை அவமதிக்கும் வகையில் செய்தி: வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 7:24 pm

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதைக் கண்டித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பதிவு செய்யப்படாத இணையத்தளம் ஒன்று நீதிபதியை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவர் சாந்தா அபிமான சிங்கம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட நீதிபதிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்