நான்கு நிதி நிறுவனங்களில் வைப்பு செய்திருந்தவர்களின் பணத்தை மீளச்செலுத்த மத்திய வங்கி தீர்மானம்

நான்கு நிதி நிறுவனங்களில் வைப்பு செய்திருந்தவர்களின் பணத்தை மீளச்செலுத்த மத்திய வங்கி தீர்மானம்

நான்கு நிதி நிறுவனங்களில் வைப்பு செய்திருந்தவர்களின் பணத்தை மீளச்செலுத்த மத்திய வங்கி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2016 | 10:24 am

அண்மைக்காலமாக சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த நான்கு நிதிநிறுவனங்களில் பணத்தினை வைப்பு செய்திருந்தவர்களின் பணத்தை மீளச் செலுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

வைப்பீட்டாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத் தன்மையைப் பேணுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நிதிச்சபை கூட்டத்தின்போது, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்டிரஸ்ட் செக்யூரிட்டீஸ் பி.எல்.சி. நிறுவனம், ஸ்டேன்டர்ட் கிரடிட் பினேன்ஸ் லிமிட்டட், சிட்டி பினேன்ஸ் கோபரேஷன் லிமிட்டட் மற்றும் சென்ரல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் பினேன்ஸ் பி.எல்.சி. ஆகிய நிறுவனங்ளே அண்மைக்காலத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்