தெற்காசிய நீச்சல் மற்றும் நீர் நிலை விளையாட்டுப் போட்டிகள்: 44 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை 

தெற்காசிய நீச்சல் மற்றும் நீர் நிலை விளையாட்டுப் போட்டிகள்: 44 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை 

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 8:30 pm

தெற்காசிய நீச்சல் மற்றும் நீர் நிலை விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா 44 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இலங்கை 10 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் ஒரு தங்கப்பதக்கத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

இலங்கை நீர் நிலை விளையாட்டு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள தெற்காசிய நீச்சல் மற்றும் நீர் நிலை விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில் 6 நாடுகளைச் சேர்ந்த 362 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து 162 வீர, வீராங்கனைகள் இணைந்துகொண்டுள்ளனர்.

நீச்சல், வோட்டர் போலோ, டைவிங் ஆகிய மூன்று பிரிவு விளையாட்டுக்களும் இந்தப் போட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்