சபோதாகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு குடிநீர், சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

சபோதாகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு குடிநீர், சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 9:46 pm

மக்கள் சக்தி, 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை சபோதாகம கனிஷ்ட வித்தியாலயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

குடிப்பதற்கு நீரின்றியும் முறையான சுகாதார வசதிகளின்றியும் சபோதாகம கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பல வருடங்களாக அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று மக்கள் சக்தியால் தீர்த்து வைக்கப்பட்டன.

மக்கள் சக்தி 100 நாட்கள் வேலைத்திட்டத்தினூடாக குடிநீருடன் சுகாதார வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு நியூஸ்பெஸ்ட்டிற்குக் கிட்டியது.

இந்த பாரிய பணியில் ஓய்வு பெற்ற உயிரியல் ஆசிரியை சந்திரா ஜயவர்தன கைகோர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை வலயக் கலவிப் பணிமனையின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்