கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 7:43 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்று முன்தினம் (18) கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை – எல்பட கீழ்ப்பிரிவு தோட்ட மக்களினால் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தொழிற்சங்க கொடிக்கம்பங்களில் கறுப்புக்கொடி பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எல்பட தோட்டக் கொழுந்து மடுவத்தில் இருந்து எல்பட தோட்டத்தில் உள்ள விநாயகர் ஆலயம் வரை பேரணியாகச் சென்று தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது சம்பளத்திலிருந்து எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் சந்தாப் பணத்தை அறவிட்டு அனுப்ப வேண்டாமெனக் கூறி கையொப்பமிட்டு தோட்ட உதவி முகாமையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்