கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 3:06 pm

பிரசெல்ஸிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சோஷலிச மற்றும் ஜனநாயகக் கட்சியினரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் சூழல் பாதுகாப்பினூடான சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் ஜோசப் டோலனுடனும் GSP வரிச்சலுகை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்கால வளர்ச்சியில் பங்காற்ற ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்