ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று சபையில்

ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று சபையில்

ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று சபையில்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2016 | 10:34 am

வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம் அமையும் என இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்த பின்னர், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அதன் மீதான முதலாம் வாசிப்பை நிகழ்த்தவுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான விவாதம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்