அம்பலாந்தோட்டையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 55 அடி நீள திமிங்கிலம் (Video)

அம்பலாந்தோட்டையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 55 அடி நீள திமிங்கிலம் (Video)

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 3:38 pm

திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில், அம்பலாந்தோட்டை ரன்தோபெ கடற்கரைக்கருகில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று இந்த திமிங்கிலத்தின் உடல் கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் மிதந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை ரன்தொபெ கடற்கரைக்கருகில் கரையொதுங்கிய திமிங்கிலம், 55 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திமிங்கிலத்தின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் காயம் காரணமாகவே திமிங்கிலம் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஹிக்கடுவை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், திமிங்கிலத்தின் உடற்பாகங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த ஹிக்கடுவை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்