இறுதி விவாதத்தில் ஹிலரி வெற்றி; ஏற்க மறுக்கிறார் ட்ரம்ப்

இறுதி விவாதத்தில் ஹிலரி வெற்றி; ஏற்க மறுக்கிறார் ட்ரம்ப்

இறுதி விவாதத்தில் ஹிலரி வெற்றி; ஏற்க மறுக்கிறார் ட்ரம்ப்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 4:43 pm

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் நடைபெற்ற இறுதி விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CNN/ORC இணைந்து நடத்திய ஆய்வில், ட்ரம்ப் 39% வாக்குகள் பெற்ற நிலையில், ஹிலரி 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த முடிவை தான் ஏற்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதியில் வெளியாகும் முடிவில் தான் தோற்றால்தான் தோல்வியை ஏற்றுக்கொள்வேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

”தேர்தலிலும் தோல்வி அடைந்தால்” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”தேர்தலில் முறைகேடு நடந்திருக்கும்” என்று பதில் அளித்துள்ளார் ட்ரம்ப்.

நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரியும், ட்ரம்பும் இதுவரை மூன்று முறை நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவொரு வழமையான நடைமுறையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்