அட்டாளைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

அட்டாளைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2016 | 10:43 am

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் கேரள கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கஞ்சா வைத்திருப்பதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மாலை 45 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஐந்து தசம் ஏழு கிராம் நிறையுடைய 14 கஞ்சா பைக்கற்றுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று பகுதியிலும் கஞ்சா வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

47 வயதான சந்தேகநபரிடமிருந்து மூன்று கிராம் கேரள கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த இரண்டு சந்தேகநபர்களையும் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்