அஜித்திற்கு வில்லனாகிறார் விவேக் ஓபராய்

அஜித்திற்கு வில்லனாகிறார் விவேக் ஓபராய்

அஜித்திற்கு வில்லனாகிறார் விவேக் ஓபராய்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2016 | 5:07 pm

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வீரம், வேதாளம் படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு பல்வேறு முன்னணி இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
இர்பான் கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பெயர்கள் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகளில் அடிபட்டது.

ஆனால், படக்குழு வில்லனாக விவேக் ஒபராயை ஒப்பந்தம் செய்திருக்கிறது. விரைவில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்