ருவன்புர மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

ருவன்புர மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுத்த மக்கள் சக்தி

எழுத்தாளர் Bella Dalima

15 Oct, 2016 | 9:01 pm

இலங்கையிலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் மக்கள் நலத்திட்டமாக தற்போது மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் மாறியுள்ளது.

குளிர்மையான நீர்வீழ்ச்சிகள் காணப்படும் மலையகத்தின் ஹட்டன் – ருவன்புர மக்கள் நீருக்காக நிலத்தை இதுவரை காலம் தோண்டி வந்தனர்.

எனினும், மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தினூடாக இன்று இங்குள்ள மக்களுக்கு தூய்மையான நீர் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இந்த நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ஒரு மாதத்திற்குள் இதற்கான பணிகளை நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க நியூஸ்பெஸ்ட் குழாத்தினரால் முடிந்துள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக 50 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் பயனடையவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்