ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா பயணம்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2016 | 8:37 am

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.

8 ஆவது பிரிக்ஸ் மாநாடு இம்முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோவாவில் நடைபெறவுள்ளது.

இந்திய பிரதமரின் அழைப்பிற்கிணங்கவே ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா , ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் பங்களாதேஷ், பூட்டான்,மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவும் இதில் பங்கேற்கின்றன.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்