பாப்பரசரால் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை மரியாளின் திருச்சொரூபம்: சிரச கிறிஸ்துமஸ் வலயத்தில் வைக்கப்படும்

எழுத்தாளர் Bella Dalima

14 Oct, 2016 | 9:26 pm

சிரச கிறிஸ்துமஸ் வலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக அன்னை மரியாளின் திருச்சொரூபம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திருச்சொரூபம் வத்திக்கானில் வைத்து பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அண்மையில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது.

இன்றைய தினம் அன்னை மரியாளின் இந்த திருச்சொரூபம், பேராயர் இல்லத்திற்கு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னை மரியாளின் விசேட திருச்சொரூபமானது டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பாதுகாப்பில், பேராயர் தேவாலயத்தில் வைக்கப்படும்.

டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெறும் விசேட திருப்பலி பூஜைகளைத் தொடர்ந்து பரிசுத்த பாப்பரசரால் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை மரியாளின் திருச்சொரூபம் சிரச கிறிஸ்துமஸ் வலயத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்