தாம் திருடன் என்பதை நாமல் ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக எஸ்.எம். மரிக்கார் தெரிவிப்பு

தாம் திருடன் என்பதை நாமல் ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக எஸ்.எம். மரிக்கார் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2016 | 7:16 pm

பழைய கொழும்பு வீதியின் நிர்மாணப் பணிகளின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்காக இன்று மேலும் 300 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், நேற்று நாமல் ராஜபக்ஸ தெரிவித்த கருத்திற்கு பதில் வழங்கினார்.

எஸ்.எம். மரிக்கார் தெரிவித்ததாவது,

[quote]வாய் பொய் கூறினாலும், நாக்கு பொய் கூறாது என்று கதை ஒன்று உள்ளது. நேற்று நாமல் ராஜபக்ஸ கூட்டம் ஒன்றில் கூறிய கருத்தினைக் கேட்டேன். எப்.சீ.ஐ.டி யில் விசாரணை செய்யும் நபர் தன்னை விட திருடன் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது தான் திருடன் என்பதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தாம் செய்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் எனவும் அரசியல்வாதிகள் திருடுவதற்கே அரசியலுக்கு வருகின்றார்கள் என்ற செய்தியையும் அவர் கூறியுள்ளார்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்