மக்கள் சக்தி: வட்டமட பகுதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மக்கள் சக்தி: வட்டமட பகுதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மக்கள் சக்தி: வட்டமட பகுதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 9:20 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு செயற்றிட்டம் இன்று மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டது.

தனமல்வில வட்டமட பகுதியில் இன்று சனசமூக நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

தனமல்வில பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஹப்பேகமுவ வட்டமட கிராமம்
இன்று விழாக் கோலம் பூண்டது

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டப கட்டிடம் இன்று அந்த கிராம மக்களிடம் கையளிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்

இந்த நிகழ்வில் நியூஸ்பெஸ்ட் பணிப்பாளர் ரினாஸ் மொஹமட் உள்ளிட்ட செய்திப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பல நோக்கு மண்டபத்தினால், இந்தக் கிராமத்தின் 200 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு தமது பொது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட பொது நோக்கு மண்டப செயற்றிட்டத்தில் சிறுவர் பூங்கா , வாசிகசாலை ,தாய் சேய் நலன்புரி மையம் மற்றும் சிறுவர் வளர்ச்சி மையம் என்பனவும் உள்ளடங்குகின்றன.

மக்கள் சக்தி 100 நாட்களுக்கு இணைவாக முன்னெடுக்கப்படும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் மரநடுகை நிகழ்வு என்பனவும் இதன் போது இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் மக்கள் சக்தி மக்கள் அணியின் அங்கத்தவர்களுக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினருக்குமிடையில் சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டியொன்று இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்