ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி நாளை விசேட உரை

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி நாளை விசேட உரை

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் ஜனாதிபதி நாளை விசேட உரை

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 12:19 pm

பெங்கொங்கில் நடைபெறும் ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் அரசத் தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளைய தினம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் ப்ரயுத் ஓவாவை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுப்பதாக இங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு தமது அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தாய்லாந்தில் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்