2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள்

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள்

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 12:13 pm

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகூடிய தொகையாக 21,499 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொசமட் குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தே குறைவான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறுகின்றார்.

மேலும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு தொடர்பில் 1213 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்