ரயில் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து சீன யுவதி உயிரிழப்பு

ரயில் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து சீன யுவதி உயிரிழப்பு

ரயில் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து சீன யுவதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 7:14 pm

அம்பலாங்கொடை, மாதம்பாகம ரயில் நிலையத்தில் ரயில் மிதிபலகையில் பயணித்த சீன நாட்டு யுவதி ஒருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மிதிபலகையில் இந்த யுவதி பயணித்தபோது மிதிபலகையில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

25 வயதான சீனாவைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடன் மேலும் சில சீன பிரஜைகள் ரயிலில் பயணித்துள்ளதுடன், அவர்கள் இன்றிரவு தமது நாட்டுக்கு புறப்பட்டுச் செல்ல இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பலப்பிட்டிய மேலதிக நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்