நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிப்பு

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிப்பு

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 12:26 pm

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலவும் வரட்சி காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட 3,997 குடும்பங்களை சேர்ந்த 14,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, மத்திய முகாம், சொரிக்கல்முனை உள்ளிட்ட 20 கிராம சேகவர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவுகின்றது.

இதனால், நீர் நிலைகள் வற்றியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – போரைதீவுப்பற்று பிரதேச செலகத்திற்கு உட்பட்ட 4747 குடும்பங்களை சேர்ந்த 15718 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் வற்றியுள்ளதால், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவின் பல பகுதிகளிலும் மக்கள் வரட்சியால் அசௌகரியத்தை எதிர்நோக்கிவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்