தமிழகத்திலிருந்து 30 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

தமிழகத்திலிருந்து 30 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

தமிழகத்திலிருந்து 30 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 11:59 am

நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் சுமார் 30 பேர் நாடு திரும்பவுள்ளனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

13 ஆண்களும், 17 பெண்களுமே எதிர்வரும் 18 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களே நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடுதிரும்பவுள்ள அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான இலவச விமான பயணச் சீட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஆரம்பகட்ட வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்