சம்பள உயர்வு கோரி மலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

சம்பள உயர்வு கோரி மலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

சம்பள உயர்வு கோரி மலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 9:59 pm

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் நிலுவை சம்பளம் ஆகியவற்றை கோரி மலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கேகாலை – தெரணியகல – மாலிபொட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை மாத்தளையிலுள்ள சுமார் 25 இற்கும் அதிகமான தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தளை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, கிங்ஸ் வீதியூடான பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்து மீண்டும் மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்தது.

சுமார் 2000 இற்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்