வரட்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு

வரட்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு

வரட்சி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2016 | 7:31 pm

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பெற்றுக் கொள்வதில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, திருக்கோயில் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் வரட்சி காரணமாக குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்த பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதால் மக்கள் நீரை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குப்பட்ட 15 ஆம் கொலனி அன்னமலை மக்கள் குடிநீரினை பெற்றுக் கொள்வதற்கு அல்லற்படுகின்றனர்.

குடிநீரை வழங்குவதற்கு இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சாகமம்.கோமாரி,திருக்கோயில் மற்றும் தம்புலுவில் ஆகிய பகுதிகளில் வரட்சி காரணமாக கால்நடைகள் நீரின்றி இறப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்