நிந்தவூர் பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2016 | 1:32 pm

அம்பாறை – நிந்தவூர் பிரதேச மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நிந்தவூர் பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிந்தவூர் மீனவர்களுக்கு ஒலுவில் வெளிச்சவீட்டு பிரதேசத்தில் ஏற்பட்ட மண்ணரிப்பைத் தடுப்பதற்காக போடப்படும் கற்கள் காரணமாக மாட்டுப்பள்ளம், அடடப்பள்ளம், வௌவால் ஓடை மத்தியத்துறை ஆகிய பகுதிகளில் பாரிய கடலரிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு எதிர்பு தெரிவித்தே மீனவர்கள ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி அப்துல் ஜலீல் ரிபா உம்மாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்