Perpetual Treasuries நிறுவனம் குறுகிய காலத்தில் இலாபம் ஈட்டியமை தொடர்பில் விரைவில் விசாரணை அவசியம்

Perpetual Treasuries நிறுவனம் குறுகிய காலத்தில் இலாபம் ஈட்டியமை தொடர்பில் விரைவில் விசாரணை அவசியம்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 8:30 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய Perpetual Treasuries நிறுவனம், குறுகிய காலத்தில், 5.2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியமை தொடர்பில் விரைவில் விசாரணை செய்ய வேண்டுமென அரசியல்வாதிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிஸ்னஸ் டைம்ஸ் பத்திரிகை நேற்று ஆய்வுக் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், 2013 ஆம் ஆண்டு முதல் நிலை நிறுவனமாக வணிகக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட Perpetual Treasuries நிறுவனம், வியத்தகு முறையில் இலாபமீட்டும் போது, கெபிட்டல் அலைன்ஸ் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் 57 மில்லியன் ரூபாவை மாத்திரமே இலாபமாக ஈட்டியுள்ளது.

Perpetual Treasuries நிறுவனம், முதல் நிலை 5 வணிக வங்கிகளையும் தாண்டியே அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனின் மருமகனுக்கு சொந்தமான Perpetual Treasuries நிறுவனம் வழமைக்கு மாறான இலாபத்தை ஈட்டியமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்