பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நியூசிலாந்து நிதி அமைச்சரை சந்தித்தனர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நியூசிலாந்து நிதி அமைச்சரை சந்தித்தனர்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 2:58 pm

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர். அந்நாட்டு நிதி அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நியூசிலாந்து நிதி மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் பில் இங்கிலிஸ்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டின் வர்த்தக நடவடிக்கைக்கு நியூசிலாந்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூசிலாந்து ஆளுனரை சந்தித்தார்.

இதன் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை,நியூசிலாந்திற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கொபிட்டன் சினிமா கிராமத்தினை பார்வையிட்டனர்.

சர்வசேதத்தின் பாராட்டினை பெற்ற லோட் ஒப் த ரிங்ஸ் சினிமாவின் படபிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட காட்சிகள் பலவற்றினை இந்த சினிமா கிராமத்தில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் பிரதமர் உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்து.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சுமார் ஒரு மணித்தியாலம், சினிமா கிராமத்தினை பார்வையிட்டதாக பிரதமர் அலுவலகத்தினால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் கெமில்ட்டன் நகரிலுள்ள கைத்தொழில் உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்