சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவதானம்

சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவதானம்

சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவதானம்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 10:32 am

சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சர் சிமோனிட்டா சொமருகாவின் இலங்கை விஜயத்தில், புகலிடம்கோரி அந்த நாட்டிற்கு சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் திருப்பி அனுப்பவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமை தொடர்பில் காணப்படும் சிறந்த நிலைமையினை அடுத்து, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புகலிடக் கோரிக்கை வழங்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து கடந்த காலங்களில் விமர்சனத்திற்குள்ளாகியது.

சுவிட்ஸர்லாந்திற்கு திருப்பி அனுப்படும் இலங்கையர்கள் சிலர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினருடன் தொடர்புகளை பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சித்திரைவதைக்குள்ளாக்கப்டுவார்கள் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் தமிழ் பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிகார அமைச்சர் வாக்குறுதியளித்திருந்தார்.

எவ்வாறாயினும் சுமார் 50,00 இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் வசித்துவருவதுடன்,இவர்களில் பலர் கடந்த கால யுத்தத்தின் காரணமாக புகலிடம்கோரிச் சென்ற தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களின் புகலிடக்கோரிக்கையினை நிராகரித்து, மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வினை வலுப்படுத்தி கைச்சாதிடுவதற்கு சுவிட்ஸர்லாந்து நீதி அமைச்சர் எதிர்பார்த்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்