சம்பள உயர்வு கோரி மலையகத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

சம்பள உயர்வு கோரி மலையகத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 12:58 pm

சம்பள உயர்வுகோரி மலையகத்தின் பல பகுதிகளிலும், தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுவருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் 10 சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கோரி மலையகம் பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்றுள்ளது.

இவர்களின் கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்காமையால்,இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்கள் மலையகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நுவரெலியா – லிந்துலை ஆகிய பகுதிகளில் கறுப்புக்கொடி அணிந்து ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டதுடன், வீடுகளிலும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததது.

ஹப்புத்தலை நகரிலும் கறுப்புக்கொடி அணிந்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை கொழும்பு – பதுளை பிரதான வீதியை ஹப்புத்தளை பகுதியில் மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருதால் இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்