இலங்கையில் சுமார் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு

இலங்கையில் சுமார் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு

இலங்கையில் சுமார் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 11:47 am

இலங்கையில் சுமார் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்தார்.

இதேவேளை சிறுநீரக நோய் பரவலாக ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும் வயது பிரிவினர் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்