உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் அட்டப்பளம் மக்கள் 

உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் அட்டப்பளம் மக்கள் 

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2016 | 10:21 pm

நிந்தவூர் – அட்டப்பளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையம் காரணமாக இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை – அட்டப்பளம் அனல் மின் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மின்சார விநியோகத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அனல் மின் நிலையத்தினால் அம்பாறை – காரைத்தீவு பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுப் பொருட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகின்து.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் புகையினால் சுவாச நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அட்டப்பளம் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரானது நொச்சியடி முகத்துவாரத்தினூடாக கடலுடன் சேர்கின்றது.

இவ்வாறு வெளியேறும் கழிவு நீரினால், விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் இதன் காரணமாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், விவசாய பயிற்செய்கையை நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள குற்றம் சுமத்தினர்.

நிந்தவூர் – அட்டப்பளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்தை அகற்றக் கோரி நிந்தவூரில் நேற்று (30) ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்