வெஹெல்அராவ, இலிகாபத்தன கிராமத்தினருக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம்

வெஹெல்அராவ, இலிகாபத்தன கிராமத்தினருக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2016 | 7:53 pm

குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டம் வலுசேர்க்கின்றது.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின்கீழ் மூன்று செயற்றிட்டங்களின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

குடிநீரைத் தேடுவதற்காக வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட பிபில – சிக்குராலந்த, வெஹெல்அராவ மற்றும் இலிகாபத்தன ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைத் தேடி மக்கள் சக்தி குழுவினர் இன்று சென்றனர்.

சுமார் 300 குடும்பங்கள் வாழும் குறித்த பகுதியில் நீருக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் பிரச்சினை இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படவுள்ளது.

இரக்க மனமுடைய மக்களின் உதவிகளுடன், மக்களின் துயர் துடைக்கும் மக்கள் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்