யோஷித்தவின் பாட்டியான டேஸி பொரஸ்டுக்கு சொந்தமானதென கூறப்படும் காணி அளவீடு செய்யப்பட்டது

யோஷித்தவின் பாட்டியான டேஸி பொரஸ்டுக்கு சொந்தமானதென கூறப்படும் காணி அளவீடு செய்யப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2016 | 9:38 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸவின் பாட்டியான டேஸி பொரஸ்டுக்கு சொந்தமானதென கூறப்படும் தெஹிவளை மிஹிது மாவத்தையிலுள்ள காணி இன்று அளவீடு செய்யப்பட்டது.

அரச நில அளவையியலாளர் திணைக்களத்தினால் இந்த அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நீதிமன்றம் இந்த காணியை அளவீடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்