மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்ல யோஷித்த ராஜபக்ஸவுக்கு நீதிமன்றம் அனுமதி

மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்ல யோஷித்த ராஜபக்ஸவுக்கு நீதிமன்றம் அனுமதி

மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா செல்ல யோஷித்த ராஜபக்ஸவுக்கு நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2016 | 4:43 pm

மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பர்னுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஸவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கினார்.

விசாரணையின் போது, யோஷித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஒரே காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டால் அதன் மூலம் யோஷித்த ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மீறப்படும் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி மாரபன சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, யோஷித்த ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்