HIV தொற்றுக்குள்ளான சகலருக்கும் இலவச சிகிச்​சையளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

HIV தொற்றுக்குள்ளான சகலருக்கும் இலவச சிகிச்​சையளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

HIV தொற்றுக்குள்ளான சகலருக்கும் இலவச சிகிச்​சையளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2016 | 11:51 am

நாட்டில் HIV தொற்றுக்குள்ளான சகலருக்கும் இலவச சிகிச்சைகளை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட HIV தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமே இதுவரை சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதேவேளை, வாலிப வயதினருக்கான சுகாதார கொள்கையொன்றை தயாரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இந்த கொள்கைத் திட்டம் தொடர்பில், வாலிபர்களுக்கு விழப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில், HIV மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இதுதவிர பாடசாலை பாடவிதானங்களிலும் பாலியல் தொடர்பான அறிவை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்