வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி

வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி

வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 4:13 pm

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வடக்கு சியாட்டில் நகரத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பர்லிங்டன் பகுதியில் உள்ள கேஸ்கேட் வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

பொலிஸார் குறித்த பகுதிக்கு செல்வதற்குள் துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

அவர் சுமார் 20 – 25 வயதில், ஒல்லியான தேகத்துடன் இருந்ததாவும், கருமையான முடியுடன் கறுப்பு நிற சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்