முல்லைத்தீவில் ஒருதொகை கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

முல்லைத்தீவில் ஒருதொகை கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

முல்லைத்தீவில் ஒருதொகை கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2016 | 12:01 pm

முல்லைத்தீவு, புளியம்பொக்கனை பகுதியில் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட கேரள கஞ்சா தொகையொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட முச்சக்கர வண்டியிலிருந்து 73 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு இந்த கஞ்சா தொகை முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்