நீர்வேலி சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

நீர்வேலி சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 8:58 pm

யாழ். நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமி கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் நாயன்மார்கட்டு சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணையை மேற்கொண்டு, அந்த அறிக்கையை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்