ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஓமல்பே சோபித்த தேரர் விலகல்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஓமல்பே சோபித்த தேரர் விலகல்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 8:29 pm

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஓமல்பே சோபித்த தேரர் இன்று அறிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் 13 ஆவது மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டில் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்ததாவது,

[quote]புதிய தலைமுறையினருக்கு தலைமைத்துவத்தை வழங்கி, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து நான் விலகுகின்றேன். மிகவும் உத்வேகமான, செயற்றிறன்மிக்க, எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படும் புதியவர்களுக்கு தலைமைத்துவத்திற்கு இடமளித்து நாங்கள் அதிலிருந்து விலகுகின்றோம். ஆனாலும், இந்த நோக்கம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் நாங்கள் கண்காணித்துக்கொண்டிருப்போம்.[/quote]

என்றார்.

ஜாதிக ஹெல உறுமயின் பொதுச் செயலாளராக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் செயற்படுவதுடன், கட்சியின் உயர் பீடத்திற்கு ஒமல்பே சோபித்த தேரரும், அத்துரலியே ரத்தன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்