எழுக தமிழ் போராட்டத்தை நாங்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும் – மனோ கணேசன்

எழுக தமிழ் போராட்டத்தை நாங்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும் – மனோ கணேசன்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 8:42 pm

மட்டக்குளியில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]வட மாகாணத்தில் இன்றைய தினத்தில் எழுக தமிழ் என்ற ஒரு அரசியல் போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனுடன் நாங்கள் முரண்படவில்லை. அங்கிருந்து வரும் கருத்துக்கள் எல்லாம் உள்வாங்கி, எழுக தமிழ் என்று சொல்லும் போது, எழுக இலங்கை என்று சொல்லக்கூடிய அந்த கோதாவிற்குள் உள்ளடக்கப் பார்க்கின்றோம். எழுக இலங்கை என்றால், எழுக தமிழ் எழுக சிங்களம் எழுக முஸ்லிம் என எல்லோரையும் உள்ளடக்கும் செயற்பாடாக இருக்கின்றது. எல்லோரும் ஒன்றாக எழுந்து நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இன்று எழுக தமிழ் என்று அவர்கள் சொல்வார்கள் என்றால், அங்கு ஏதோ குறைபாடுகள் இருக்கின்றன. கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்கள் எல்லாம் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும். வழங்கப்பட்டால் தான் உண்மையான ஐக்கியம் ஏற்படும் என்று நாங்கள் தெளிவாக நினைக்கின்றோம். எழுக தமிழ் போராட்டத்தை நாங்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். அதன் மூலம் தான் அதனை உள்வாங்கிக்கொண்டு செயற்பட முடியும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்