எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 8:39 pm

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ”எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் இருந்து பேரணிகள் ஆரம்பமாகின.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் பலர் பேரணிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் மக்கள் இந்த பேரணிக்காக வருகை தந்திருந்ததாக எமது செய்தியாளர்கள் கூறினர்.

பேரணிகள் யாழ். முற்றவெளியை சென்றடைந்ததும் எழுக தமிழ் சுடர் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்