ஹம்பேகமுவ மக்களின் சுத்தமான நீருக்கான கனவு நனவாகியது

ஹம்பேகமுவ மக்களின் சுத்தமான நீருக்கான கனவு நனவாகியது

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 9:16 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக தனமல்வில – ஹம்பேகமுவ மக்களின் சுத்தமான நீருக்கான கனவு நனவாகியது.

சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறாமையால் ஹம்பேகமுவ பிரதேசத்தில் அதிக சிறுநீரக நோயாளர்கள் உள்ளனர்.

நீருக்காக துன்பப்படும் மக்களின் துன்பத்தை நீக்குவதற்கான திட்டத்தை நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டக்குழுவினர் அண்மையில் ஆரம்பித்தனர்.

11 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கடற்படையினரின் விசேட ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் தென்கிழக்கு பிரிவின் பிரதி கட்டளைத்தளபதி எஸ்.பீ.குருகுலசூரிய தலைமையில் இன்று இந்தத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஹம்பேகமுவ கனிஸ்ட வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த நீர்த்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கும் கிராமத்திலுள்ள 800 குடும்பங்களுக்கும் நீரைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கிட்டியுள்ளது.

இந்த நீர்த்திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்