வவுனியாவில் தற்கொலை அங்கியின் பாகங்கள் மீட்பு

வவுனியாவில் தற்கொலை அங்கியின் பாகங்கள் மீட்பு

வவுனியாவில் தற்கொலை அங்கியின் பாகங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 6:17 am

வவுனியாவிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின்போது தற்கொலை அங்கியின் பாகங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து பிரதேசத்தில் தொடர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை இன்று செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை அங்கியின் பாகங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான அறிக்கையொன்றை வவுனியா நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்