முந்தல், செம்பட்டை பகுதியில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

முந்தல், செம்பட்டை பகுதியில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 11:45 am

முந்தல், செம்பட்டை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செம்பட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரின் சடலம், நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் நேற்று முன்தினமிரவு தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை பிரதேச தோட்டப் பகுதியொன்றிலிருந்து பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் காணப்பட்ட இடத்தில் புத்தளம் பதில் நீதவான் இன்று காலை மரண விசாரணை நடத்தியுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்