ஜனாதிபதியின் சுகாதார திட்டங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

ஜனாதிபதியின் சுகாதார திட்டங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

ஜனாதிபதியின் சுகாதார திட்டங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 8:46 am

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள திட்டங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மாக்ரட் சேன் பாராட்டியுள்ளார்.

தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற மாநாட்டின் விசேட அமர்வில் கலந்துகொண்டிருந்தபோதே ஜனாதிபதிக்கு இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விசேட அமர்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டமைக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இதன்போது மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்