சுங்கப் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

சுங்கப் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 4:22 pm

சுங்கப் பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள சுங்க கட்டளை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, புதிய சுங்க சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இணக்கம் எட்டப்பட்டதையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சுதத் சில்வா கூறினார்.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி நிதியமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தேச சுங்க சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 15 ஆம் திகதி முதல் சுங்கப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்