கே.எல்.எம் சரத்சந்திர ஓய்வு பெற்ற பின்னரும் அலுவலக வாகனத்தை மீள ஒப்படைக்காமை தொடர்பில் விசாரணை

கே.எல்.எம் சரத்சந்திர ஓய்வு பெற்ற பின்னரும் அலுவலக வாகனத்தை மீள ஒப்படைக்காமை தொடர்பில் விசாரணை

கே.எல்.எம் சரத்சந்திர ஓய்வு பெற்ற பின்னரும் அலுவலக வாகனத்தை மீள ஒப்படைக்காமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 6:51 am

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரி கே.எல்.எம் சரத்சந்திர ஓய்வு பெற்றதன் பின்னர், அவரது வாகனத்தை மீள ஒப்படைக்காமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஓய்வு பெற்றதன் பின்னர் அவர் கடந்த 5 வருடங்களாக வாகனத்தை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஓய்வு பெற்றிருந்தார்.

எனினும் அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனத்தை இதுவரை மீள ஒப்படைக்கவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் பொருட்டு எதிர்வரும் திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்கு வருமாறு முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்