கிளிநொச்சியின் சில பகுதிகளில் தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சியின் சில பகுதிகளில் தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சியின் சில பகுதிகளில் தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 11:34 am

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகளில் ஒருவகை தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஞானிமடம், கருக்காய்தீவு ஆகிய கிராமங்களில் கடந்த இருவாரங்களாக ஒருவகை தொற்றுநோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பது தொடர்பில் பதிவாவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக உயிரிழந்த மாடுகளின் வாயிலிருந்து நுரை வெளியேறுவதுடன், வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தடுப்பு மருந்து பயனளிக்காத நிலையில் சில கால்நடைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்