ஔடதங்களின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியீடு

ஔடதங்களின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியீடு

ஔடதங்களின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 6:27 am

ஔடதங்களின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியிடப்படவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள சேனக பிபிலே ஞாபகார்த்த நிகழ்வில் ஔடதங்களின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதற்கமைய 30 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளின் விலைகள் குறைவடையும் என பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் பேராசிரியர் சேனக பிபிலே கொள்கை இன்று முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்