எழுக தமிழ் போராட்டம் சமத்துவத்தை வலியுறுத்துமென நம்புவதாக மனோ கணேசன் தெரிவிப்பு

எழுக தமிழ் போராட்டம் சமத்துவத்தை வலியுறுத்துமென நம்புவதாக மனோ கணேசன் தெரிவிப்பு

எழுக தமிழ் போராட்டம் சமத்துவத்தை வலியுறுத்துமென நம்புவதாக மனோ கணேசன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 8:07 pm

எழுக தமிழ் பேரணி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவருக்கும் தமக்கும் உதவியாக இருக்கவேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடபுலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணி, எழுக இலங்கை போராட்டத்திற்கு உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் என அறிக்கையொன்றின் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

எழுக தமிழ் போராட்டமும் எழுக இலங்கை போராட்டமும் ஒன்றையொன்று புரிந்துகொண்டால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு எழ தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும்போது அது தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற ஒட்டுமொத்த இலங்கையரை விழிப்பதாக அர்த்தப்படவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எழுக தமிழ் போராட்டம் சமத்துவத்தை வலியுறுத்துமென தாம் நம்புவதாகவும் தேசிய சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப் பொருத்தவரையில் எழுக தமிழ் போராட்டத்தை முரணாக நோக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் வடபுலத்து எழுக தமிழ் போராட்டத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்