அம்பலங்கொட கொலை தொடர்பில் மூவர் கைது

அம்பலங்கொட கொலை தொடர்பில் மூவர் கைது

அம்பலங்கொட கொலை தொடர்பில் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2016 | 1:52 pm

அம்பலங்கொட பிரதேசத்தில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவரது காதலன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் அம்பலங்கொடை பிரதேசத்தில் 16 வயதுடைய யுவதியொருவர் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு மூன்று நாட்களிக்கு பின் கொபய்கடுவ பிரதேசத்தில் அவரது காதலன் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்

சம்பவம் தொடர்பில் மீடியாகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து நேற்று சந்தேக நபர்கள் மூவர் கைது செய்பப்பட்டனர்.

குறித்த யுவதியின் சகோதரர் முதலில் கைது செய்ப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து ஏனைய மூவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்